சிரித்த முகமே அழகு முகம்! முப்பது-நாற்பது வயதைக் கடந்தவர்கள் கூட தங்களது சிரிப்பை எப்படி மேம்படுத்துவது என்று இப்போதெல்லாம் யோசிக்கிறார்கள். அவர்களுக்கு தங்களது புன்சிரிப்பை எப்படி மெருகூட்டி தங்களைத் தாங்களே அழகூட்டிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ஈர்க்கும் புன்சிரிப்பு நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தங்களது புன்சிரிப்பு அழகானபடிக்கு இல்லை என்றால் அதற்கான ஒழுங்குபடுத்தும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் போக்கு இப்போதெல்லாம் அதிகரித்துள்ளது.
நன்றாக வளர்ந்த இளைஞர்கள் ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சை (பல் கிளிப் அணியும் சிகிச்சை முறை) எடுப்பதன் பயன்கள்
- கோணி இருக்கும் பற்களால் விளையும் வாய் சுகாதாரக்கேடு பற்றிய விழிப்புணர்வு வளர்ந்த இளைஞர்களுக்கு அதிகமாக உள்ளது.
- வயது அதிகமாக இருந்தாலும் ஒருவர் ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சை எடுக்க முன் வருவார் என்றால் அவருக்கு அதைப்பற்றிய புரிதல் நன்றாகவே இருக்கின்றது என்று பொருள். ஆக ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சையில் பல நிலைகள் இருப்பதும், அது பல மருத்துவ முறைகளின் கூட்டு மருத்துவம் என்பது பற்றியும் அவர்களுக்கு விழிப்புணர்வு உள்ளது.
- ஆர்தொடொண்டிக் மருத்துவ முறையில் உள்ள அனைத்து நெறிமுறைகளையும் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் அவர்களுக்கு நன்றாக தெரிந்து உள்ளது. இந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் பெரும்பாலான குழந்தைகளை விடவும் பெரியவர்களுக்கு இது மிகவும் எளிது.
- வயது வந்தவர்களுக்கு ஒரு நல்ல புன்சிரிப்பு எத்தகைய நேர்மறையான எண்ணங்களையும், அனுபவங்களையும் கொண்டு வரும் என்ற அடிப்படை புரிதல் இருக்கின்றது. அது தங்களது பணி சார்ந்த வளர்ச்சியிலும், ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் எப்படி உதவி புரிகின்றது என்ற புரிதலும் இருக்கின்றது. அதனால் வயது வந்தவர்கள் ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ள அனேகமாக தயங்குவதில்லை.
வளர்ந்தவர்கள் ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்வதில் உள்ள சவால்கள்
- சிலருக்கு தேய்ந்த பற்கள், வடிவம் இல்லாத பற்கள், முறையின்றி உள்ளே வளரும் கடவாய்ப் பற்கள், பல் ஈறுகளில் உள்ள நோய்கள் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அவர்கள் இந்த பிரச்சனைகளுக்கு முறையான சிகிச்சைகளை மேற்கொண்டு, அதற்கெல்லாம் முதலில் தீர்வு கண்டுவிட்டு பிறகுதான் ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம்.
- சில சமயங்களில் ஈறுகளுக்கு உள்ளே எக்குத்தப்பாக வளரும் கடவாய் பற்களை பிடுங்கி எடுத்து அதற்கு பிறகுதான் ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். எப்படி பார்த்தாலும் இந்த ஆர்தொடொண்டிக் மருத்துவ சிகிச்சை முறையை உங்கள் பற்களில் உள்ள எல்லா மருத்துவ பிரச்சனைகளையும் ஒருசேர தீர்க்க உதவுகிறது.