நம் உடலின் நலனை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நம் வாய் விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. பல்வேறு ஆய்வுகள் இதனையே சொல்கின்றன. நல்ல வாய் ஆரோக்கியம் நல்ல உடல் ஆரோக்கியத்தை குறிக்கும் என்றே சொல்லலாம். அதே வேலை மோசமான வாய் சுகாதாராம் பல நோய்க்கும், உடல் கேட்டிற்கும் வித்திடும் என்று தான் சொல்லவேண்டும். சர்க்கரை நோய் என்று சொல்லப்பட்டு நீரிழிவு நோயும் இதில் ஒன்று.
மோசமான வாய் சுகாதாராம் சர்க்கரை நோயை உண்டுசெய்யுமா?
மோசமான வாய் சுகாதாரம் பல் சொத்தைக்கு வழி வகுக்கும். சொத்தைப் பற்களில் பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிர்களும் வாழ்கின்றன என்று நமக்கு தெரியும். ஏறக்குறைய 700 விதமான பாக்டீரியாக்கள் பல் சொத்தையில் வாழ்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காரணத்தினால் வைப் பகுதியில் வீக்கங்கள் நிகழ்கின்றன. இந்த வீக்கங்களால் உடல் அதற்கு பதிலடியாக நோய் எதிர்ப்பு காரணிகளை உற்பத்தி செய்கின்றன. இந்த வீக்கங்கள் ஈறுகளில் ரத்தம் வடிவதை உண்டாக்கலாம். இந்த காரணங்களால் சிறு சிறு காயங்கள் நம் ஈறுகளில் ஏற்பட்டு அதனால் அதிகப்படியான நோய் எதிர்ப்பு காரணிகளை நம் உடல் உற்பத்தி செய்ய முற்படலாம். இந்த சுழற்சி தொடருமானால் நோய் எதிர்ப்பு காரணிகள் நம் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டால் நலமான உடல் திசுக்கள் கூட பாதிக்கப்படலாம். இப்படியாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகமாகி பெரியோடான்டைடிஸ் (periodontitis) என்ற நோயில் கொண்டு போய் அது விடலாம். இந்த நோய் மோசமாக ஈறுகள் பாத்க்கப்பட்ட நிலையை குறிக்கும்.
இந்த நிலைக்கு இணையாக, உடல் எப்போதெல்லாம் அதிகப்படியான நோய் எதிர்ப்பு காரணிகளை உண்டாக்குகிறதோ, சில பல உயிரி-வேதிப் பொருட்களையும் (biochemical compounds) சேர்த்தே சுரக்கிறது. இந்த உயிரி-வேதிப்பொருட்கள் autoimmunity என்று சொல்லக்கூடிய தன்தடுப்பாற்றலை தேவையில்லாமல் அதிகரிக்கிறது. இது சுழற்சி முறையில் திரும்பத் திரும்ப உடலுக்குள் நிகழ்கிறது. இந்த சுழற்சி அதிகமாக நிகழும்போது உடல் இன்சுலின் ஹார்மோன்களுக்கு பதில் கொடுக்காமல், இன்சுலின் எதிர்ப்பு என்ற நிலைக்கு சென்றுவிடுகிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதில் சர்க்கரை நோயும், பெரியோடான்டைடிஸ் நோயும், autoimmune நோய்கள் என்றே வகைப் படுத்தப் படுகின்றன.
சர்க்கரை நோய் மோசமான வாய் ஆரோக்கியத்துக்கு வித்திடுமா?
ஆம். மோசமான வாய் ஆரோக்கியம் சர்க்கரை நோயை உண்டு பண்ணுவது எப்படியோ, அதற்கு தலைகீழாக சர்க்கரை நோய் மோசமான வாய் ஆரோக்கியத்துக்கு வித்திடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் தொற்று முழுவதும் குறைவதில்லை, ஆனால் படிப்படியாக அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு நோய் தொற்றும், ஈறுகளில் ஏற்பாடு தொற்றுகளும் சற்று அதிகமாகவே ஏற்படுகின்றன. அதோடில்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் உடல் பாக்டீரியாக்களை எதிர்த்து திறம்பட செயல்படாது. இதனால் அதிகப்படியான சர்க்கரை அளவு இருப்பவர்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் ஈறுகள் வீக்கமுற்று தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும். இந்த கட்டுப்பாடு இல்லாத ஈறு வீக்கம், ரத்தத்தில் கட்டுப்பாடு இல்லாமல் சர்க்கரை அளவை ஏற்றுகிறது. இந்த சுழற்சியை கண்டிப்பாக குறுக்கிட்டு தடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
நல்ல வாய் சுகாதாரம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது
அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நல்ல வாய் சுகாதாரத்தை பேணுவது மிக முக்கியம் என்று சொல்லப்படுகிறது. பல் மருத்துவரை ஆலோசிப்பது வழமையாக இருக்கும் பட்ச்சத்தில், வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வாய் நலனை பேணிப் பாதுகாப்பது என்றுமே உடல் நலனுக்கு உகந்த ஒரு செயலாகும்.