Call Us

+91-99415-11444

Opening Hours

Mon - Sat : 1000 hrs to 2100 hrs Sun : 1000 hrs to 1300 hrs

Book Appointment

Click the link to book your appointment with us

துளையிட்டு இடப்பட்ட புதிய பொய்ப்பல்லை எப்படி பராமரிப்பது?

ஒரு பல்லோ, பல பற்களோ விழுந்துவிட்டால் நம் புன்னகையை மீட்டு தரக்கூடிய சிறந்த தீர்வு Dental implants என்று சொல்லக்கூடிய “பொய்ப்பல்” ஆகும். மயக்க மருந்துகளில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்கள் பொய்ப்பல் இடக்கூடிய வேலையை சுலமாக்கிவிட்டன. வலி குறித்த அச்ச உணர்வு இல்லாமல் இந்த மினி அறுவை சிகிச்சையை செய்துக்கொள்ள இப்போது இடமுண்டு. பொய்ப்பல்லை துளையிட்டு வைத்துக் கொண்ட பின் அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பலர் கேட்பதுண்டு. அவர்களுக்கு தான் இந்த நீண்ட பதிவு.

டென்டல் இம்பிளான்ட் (பொய்ப்பல்) அறுவை சிகிச்சைக்குப் பின் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு

1) அறுவை சிகிச்சை முடிந்த உடனே பொய்ப்பல் வைத்துக் கொண்டவரை கட்டுத்துணியை (gauze) கடித்துக் கொள்ள பல் மருத்துவர் கேட்டுக்கொள்வார். இந்த அழுத்தம் பொய்ப்பல்லை சுற்றி ரத்தம் கெட்டியாகிப்போக வழி செய்யும். இப்படி ரத்தம் கட்டிப்போனால் தான் காயம் ஆறி பொய்ப்பல் உறுதியாக தாடை எலும்புகளில் ஊன்ற உதவும். மேலும் ரத்தக் கசிவு நின்று போகவும் உதவி புரியும்.

2) முகம் வீங்கிப்போகாமல் இருக்க ஐஸ் பாக் கொண்டு தாடையை தடவிக் கொடுக்கலாம்.

டென்டல் இம்பிளான்ட் ஒருத்திய முதல் நாள்வீட்டில் நாம் எடுக்க வேண்டிய பராமரிப்பு முன்னெடுப்புகள்

1) ஒரு நாள் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தபடி ஒய்வு எடுப்பது நல்லது. உடற்பயிற்சி செய்வது, கடின உழைப்பில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபடவேண்டாம். ஒய்வு எடுப்பது ரத்த கசிவு ஏற்படுவதை தடுக்கிறது.

2) உங்கள் பல் மருத்துவர் பரிந்துரைத்த மசித்த மென்மையான உணவுகளையே உட்கொள்ள வேண்டும். ஸ்ட்ரா என்று சொல்லப்படும் உணவுக்குழாயில் எந்த பானத்தையும் பருக வேண்டாம். ஏனென்றால் இது ரத்தக் கட்டை அகற்றிவிடும் வாய்ப்பு உண்டு. ரத்தக்கட்டு காயம் ஆறுவதற்கு உதவி புரிகிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டும்.

3) பல் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரை மருந்துகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

டென்டல் இம்பிளான்ட் பொருத்திய 2-3 நாட்கள்வீட்டில் நாம் எடுக்க வேண்டிய பராமரிப்பு முன்னெடுப்புகள் 

1) உங்களுக்கு சவுகரியமாக இருக்கும் பட்சத்தில் பல் துலக்கவும், பிளாஸ் செய்யவும் தொடங்கலாம்.

2) வாயை வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளிக்கலாம். இது வீக்கம் ஏற்படுவதையும், ரத்தக்கசிவு ஏற்படுவதையும் தடுக்கிறது.

3) மூன்றாம் நாளில் இருந்து வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ள தொடங்கலாம். ஆனால் கடினமான உணவுப் பொருட்களை கண்டிப்பாக சில பல வாரங்களுக்கு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பொருத்தப்பட்ட டென்டல் இம்பிளான்ட் தாடை எலும்பினுள் முழுவதும் ஒருங்கிணைந்த பிறகே ஒட்டுமொத்தமாக காயம் ஆறியது என்ற நிலைக்கு வரும்.

டென்டல் இம்பிளான்ட் பொருத்தப்பட்ட 6-8 நாட்களுக்கு பிறகுநாம் எடுக்க வேண்டிய பராமரிப்பு முன்னெடுப்புகள் 

1) அநேகமாக டென்டல் இம்பிளான்ட் முழுவதும் உங்கள் தாடை எலும்பினுள் உறுதியாக சேர்ந்து இருக்கும். பல் மருத்துவரிடம் நீங்கள் சோதனைக்கு செல்லும்போது இதனை உறுதி செய்துக்க கொள்ளுங்கள்.

2) பல் துலக்குதல், பிளாஸ் செய்தல், வாயை கொப்பளித்தல் போன்ற வாய் பராமரிப்பு செயல்களை இயல்பாக செய்யுங்கள். இந்த கட்டத்தில் உங்கள் பற்கள் இயற்கையான பற்களை ஓத்தே இருக்கும்.

3) பொய்ப்பல் என்று சொல்லப்படும் டென்டல் இம்பிளான்ட்களில் சொத்தை ஏற்படாது என்றாலும் அதனை சுற்றியுள்ள திசுக்களில் தோற்று ஏற்படலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் டென்டல் இம்பிளான்ட் இருந்தாலும் வாய் சுகாதாரத்தை பராமரிக்கும் செயலில் உள்ள முக்கியத்துவத்தை உணர வேண்டும். கூடவே சில மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் பல் மருத்துவர்களை சந்துத்து உங்கள் பற்களை பரிசோதனை செய்துக்க கொள்ள வேண்டும்.

டென்டல் இம்பிளான்ட் பொருத்திய பிறகு அதிகமான வீக்கம், ரத்தக்கசிவு, வாய் துர்நாற்றம் வீசுதல் போன்றவை ஏற்பட்டால் உடனே நீங்கள் இம்பிளான்ட் பொருத்திக் கொண்ட பல் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

Call Now ButtonCall Now